தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ‘நிழல் இல்லா நாள்’!

தமிழகம்
Updated Apr 21, 2019 | 15:56 IST | Times Now

தமிழகத்தில் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது.

tamil nadu, தமிழ்நாடு
சூரியன் மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இன்று நிழல் இல்லா நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அதுகுறித்த அறிவியல் நிகழ்வை புதுச்சேரியில் இன்று மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

அறிவியல் சார்ந்த வானியல் நிகழ்வான இது, சூரியன் நமக்கு செங்குத்தாக நேர் உச்சிக்கு வரும்போது ஓர் இடத்தில் இருக்கும் ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இரு முறை பூஜ்ஜியமாகிறது. 

அந்நிகழ்வே ‘நிழல் இல்லா நாள்’ எனப்படுகிறது. மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள இடங்களில் மட்டுமே இந்த அரிய நிகழ்வைக் காணமுடியும். இதன் மூலமாக நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடிவதுடன், சூரியனின் உயரத்தையும் கணக்கிட முடியும்.

அவ்வகையில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது. புதுச்சேரியில் பகல் 12.14 மணி முதல் 12.17 மணி வரை ஏற்பட்ட இந்த அரிய நிகழ்வை காண புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவியல் இயக்கம் இணைந்து 20 இடங்களில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

NEXT STORY
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ‘நிழல் இல்லா நாள்’! Description: தமிழகத்தில் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது.
Loading...
Loading...
Loading...