சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த்

தமிழகம்
Updated Apr 19, 2019 | 16:14 IST | Times Now

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணம் புரிகிறது. நான் ரசிகர்களை ஏமாமற்ற மாட்டேன் என இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..

Actor Rajinikanth, நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: ANI

சென்னை: அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணம் புரிகிறது.  நான் அவர்களை ஏமாமற்ற மாட்டேன். தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றி உள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை.

 

 

70 சதவித வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்குப்பதிவு தான். நான்கு நாட்கள் தொடர் விடுமுறையினாலும் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது. அறிவித்தப்படி அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என கூறினார். மேலும், மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? மே 23-ல் தெரிய வரும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

 

 

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களித்தனர். இருப்பினும் ரஜினி கட்சி களத்தில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி டிரெண்ட் செய்ய தொடங்கினார்கள். நேற்று இரவு வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. அதில், இதுவரை கடமைக்காக வாக்களித்தேன்...  அடுத்த முறை கண்டிப்பாக ரஜினிக்குத்தான் என் வாக்கு என ரசிகர்கள் பலரும் பதிவிட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணம் புரிகிறது.  நான் அவர்களை ஏமாமற்ற மாட்டேன் என இன்று தெரிவித்துள்ளார்.
 

NEXT STORY
சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் Description: நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணம் புரிகிறது. நான் ரசிகர்களை ஏமாமற்ற மாட்டேன் என இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..
Loading...
Loading...
Loading...