சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: காரணம் என்ன? 5 முக்கிய தகவல்கள்!

தமிழகம்
Updated Jun 20, 2019 | 18:41 IST | Times Now

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? 5 முக்கிய தகவல்கள்.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?  |  Photo Credit: Times Now

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை இதுவரை இல்லாத அளவு வரலாறு காரணாத தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. மழை பெய்வதற்கான சிறு அறிகுறிகள் தோன்றியுள்ள நிலையில், குடிநீர் ஆதாரங்கள் வற்றி வருகின்றன. 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் சென்னையின் தண்ணீர் தேவை 47 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி தெரிவிக்கிறது. அதாவது தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டரில் இருந்து 1100 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 2017 ஆம் ஆண்டு சென்னையில் 149.5 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில், 2018 ஆம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக 75.55 சென்டி மீட்டரே மழை பெய்துள்ளது.

சென்னையின் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், தண்ணீர் தேக்கி வைக்கும் ஆதாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கடந்த 100 ஆண்டுகளாக நீர் தேக்கும் ஆதாரங்கள் அதே அளவாகவே உள்ளன. மேலும், சென்னையில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும், குப்பைகளைக் கொட்டும் இடமாக மாறியுள்ளதாகவும் பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவரும் 5 முக்கியத் தகவல்கள்:

1) சென்னையில் உள்ள பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றி அறிவுறுத்தியுள்ளன. மேலும், தண்ணீர் வீணாவதை தடுக்க, அந்நிறுவனங்களில் உள்ள கழிவறைகளின் உபயோகத்தை பாதியாகவும் குறைத்துள்ளன.

2) தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சில ஹோட்டல்கள் சேவையை நிறுத்தியுள்ளதாக ஹிந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த சில வாரங்களாக ஹோட்டல்களின் செலவு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

3) தண்ணீருக்கு சில இடங்களில் பொதுமக்களிடையே சண்டை மூண்டுள்ளது. தண்ணீருக்காக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரை கத்தியால் தாக்கிய தமிழ சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபாலின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4) தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க அளிக்க தமிழ அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

5) தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க 5 ஆயிரத்து 398 கோடி நிதி உதவியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கோரியுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்த்து சென்னை மக்களை தமிழக அரசு நிம்மதி அடையச் செய்யுமா என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

NEXT STORY
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: காரணம் என்ன? 5 முக்கிய தகவல்கள்! Description: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? 5 முக்கிய தகவல்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles