’மூன்றாவது கட்ட சிகிச்சை’ - மீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்?!

தமிழகம்
Updated Apr 23, 2019 | 17:45 IST | Times Now

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் சில ஆண்டுகளாக பாதிப்பில் உள்ளது. சிறுநீரகக்கோளாறு அவரை வாட்டி வதைத்தது. குரலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.

election 2019, தேர்தல் 2019
தேமுதிக தலைவர் விஜயகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நல சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் சில ஆண்டுகளாக பாதிப்பில் உள்ளது. சிறுநீரகக்கோளாறு அவரை வாட்டி வதைத்தது. குரலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர், மீண்டும் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை எடுக்கத் துவங்கினார். இதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மீண்டும் கடந்த டிசம்பர் 18ம் தேதியன்று அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற அவர், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு சென்னை திரும்பினார். 

Vijayakanth

மக்களவைத் தேர்தலுக்காக சென்னையில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த், ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தொண்டர்களுக்கு மத்தியில் பேசினார். இந்நிலையில் அவரது உடல்நிலை இன்னும் சரியாகாத காரணத்தால் மூன்றாவது கட்ட சிகிச்சைக்காக அவர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிகிறது. மேலும், அவருடன் இணைந்து அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகபாண்டியனும் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் அவரது இளைய மகன் விஜய் பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் கவனித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

NEXT STORY
’மூன்றாவது கட்ட சிகிச்சை’ - மீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்?! Description: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் சில ஆண்டுகளாக பாதிப்பில் உள்ளது. சிறுநீரகக்கோளாறு அவரை வாட்டி வதைத்தது. குரலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola