களமிறங்கினார் கேப்டன் - சென்னையில் இன்று பிரச்சாரத்தில் பரபர பிசி!

தமிழகம்
Updated Apr 15, 2019 | 19:47 IST | Times Now

இறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் இன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

Vijayakanth, விஜயகாந்த்
தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை முதல் துவங்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தேமுதிக தமிழகத்தில் 4 தொகுதிகாளில் போட்டியிடுகிறது. 

Vijayakanth

இந்நிலையில், உடல்நலக் குறைவால் இந்தமுறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் இன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

Vijayakanth

சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் நடத்தி வருகின்றார். தேமுதிக வேட்பாளருக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க வேண்டுகிறேன் என்று தனது குரலில் வாக்கு சேகரித்து வருகிறார் விஜயகாந்த்.

NEXT STORY
களமிறங்கினார் கேப்டன் - சென்னையில் இன்று பிரச்சாரத்தில் பரபர பிசி! Description: இறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் இன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
Loading...
Loading...
Loading...