விஜயதசமி: தேவகோட்டை பள்ளியில் நெல் மணிகளில் "அ" கரம் எழுதிய மாணவர்கள்!

தமிழகம்
Updated Oct 08, 2019 | 20:00 IST | சு.கார்த்திகேயன்

விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம், நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் இன்று நடைப் பெற்றது.

Kids Write First Letter in Rice at Devakottai
Vijayadasami Admission 2019  |  Photo Credit: Facebook

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம், நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக நடைப் பெற்றது.

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும், மாணவர்களையும் ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.  

Vijayadasami Admission 2019

இவ்விழாவானது நடராஜபுரம் காளியம்மன் கோவிலில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளம், நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பள்ளியை அடைந்தனர்.

தேவகோட்டை  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் முனைவர் . சபா.அருணாச்சலம்   மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர். ஆசிரியை முத்து லெட்சுமி , செல்வ  மீனாள் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.

Vijayadasami Admission 2019

மாணவிகள் ஜனஸ்ரீ, நதியா, சிரேகா, சங்கரி ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல கற்றுக்கொடுத்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் செல்வமீனாள், முத்துமீனாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

NEXT STORY
விஜயதசமி: தேவகோட்டை பள்ளியில் நெல் மணிகளில் "அ" கரம் எழுதிய மாணவர்கள்! Description: விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம், நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் இன்று நடைப் பெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்