வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

தமிழகம்
Updated Aug 09, 2019 | 15:38 IST | Times Now

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

 Vellore Lok sabha election
Vellore Lok sabha election  |  Photo Credit: Twitter

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு ரத்து செய்யப்பட்ட தேர்தல் கடந்த 5-ம் தேதி  நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்தார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி மூன்றாம் இடத்தில் இருந்தார். 

நான்கு சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்தபோதிலும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் அவருக்குமான வாக்கு வித்தியாசம் குறைந்து வந்தது. பின்னர் ஏ.சி.சண்முகம் இறங்கு முகம் கண்டார். தொடர்ந்து வாக்கு வித்தியாசம் முன்னும் பின்னுமாக இருந்தன. இதனால் வேலூர் மக்களவையை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடிக்கு கூடிக்கொண்டே சென்றது. இந்த பரபரப்பான சூழலில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

திமுக வெற்றி

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,85,340 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 4,77,199 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,995 வாக்குகள்

திமுக முன்னிலை 

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,79, 011 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 4,70,725 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,505 வாக்குகள்

திமுக முன்னிலை 

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,78, 855 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 4,70,395 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,502 வாக்குகள்

திமுக முன்னிலை 

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,68, 870 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 4,57,226 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 25,953 வாக்குகள்

திமுக முன்னிலை

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,56,070 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 4,53,295 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 25,296 வாக்குகள்

திமுக முன்னிலை

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 3,80,811 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 3,61,428 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 16,454 வாக்குகள்

திமுக முன்னிலை

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 3,15,448 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 2,99,368 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 16,454 வாக்குகள்

திமுக முன்னிலை

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 3,15, 448 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 2,99,368 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 16, 454 வாக்குகள்

திமுக முன்னிலை

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,87,906 வாக்குகள்

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 2,75,748 வாக்குகள்

தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 13,359 வாக்குகள்

அதிமுக தொடர்ந்து முன்னிலை

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 2,40,351 வாக்குகள்

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,37,189 வாக்குகள்

தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 12,560 வாக்குகள்

அதிமுக தொடர்ந்து முன்னிலை

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 2,28,529வாக்குகள்

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,21,604 வாக்குகள்

தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 11,885 வாக்குகள்

அதிமுக தொடர்ந்து முன்னிலை

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 1,87,750 வாக்குகள்

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 1,74,646 வாக்குகள்

தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 9,273 வாக்குகள்

அதிமுக தொடர்ந்து முன்னிலை

ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க) - 1,41,423 வாக்குகள்

கதிர் ஆனந்த் (தி.மு.க) - 125,726 வாக்குகள்

தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 7,091 வாக்குகள்

தபால் வாக்குகள் விவரம்

அதிமுக - 509

திமுக - 360

நாம் தமிழர் - 83 


 

NEXT STORY
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி Description: வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...