’அடுத்தது உதயநிதி ஸ்டாலினா?’ - திமுக மாநில இளைஞரணி பதவியைத் துறந்த வெள்ளக்கோவில் சாமிநாதன்!

தமிழகம்
Updated Jun 17, 2019 | 21:25 IST | Times Now

திமுக இளைஞர் அணியில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். 2017ம் ஆண்டு திமுகவின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். 

DMK, திமுக
வெள்ளக்கோவில் சாமிநாதன்  |  Photo Credit: Twitter

சென்னை: திமுகவில் இளைஞர் அணி மாநிலச் செயலாளராக பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினா செய்துள்ளார். 

திமுக இளைஞர் அணியில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். 2017ம் ஆண்டு திமுகவின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.  அப்போது அவர் வகித்து வந்த மாநில இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். 32 ஆண்டுகள் கழித்து புதிய இளைஞரணிச் செயலாளர் ஆனார் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

எனினும், தற்போது சாமிநாதன் வழங்கியுள்ள ராஜினாமா கடிதத்தை இன்னும் கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு நடுவில் அடுத்த மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாகவும், அதற்காகதான் இந்த ராஜினாமா என்பதாகவும் பேச்சு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
’அடுத்தது உதயநிதி ஸ்டாலினா?’ - திமுக மாநில இளைஞரணி பதவியைத் துறந்த வெள்ளக்கோவில் சாமிநாதன்! Description: திமுக இளைஞர் அணியில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். 2017ம் ஆண்டு திமுகவின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles