தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 1-ம் ஆண்டு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - ஸ்டாலின், கனிமொழி உறுதி!

தமிழகம்
Updated May 22, 2019 | 10:06 IST | விபீஷிகா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரழந்தவர்களுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்படுகிறது.

tuticorin gunshoot
https://upload.wikimedia.org/wikipedia/commons/3/39/Sterlitejpg.jpg 

மே - 22 தமிழக வரலாற்றின் ஒரு கறுப்பு தினம் என்றுதான் கூற வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தினம் இன்று. இதில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இன்று அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்று கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் பல வருடங்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்து 99 நாட்கள் ஆங்காங்கே ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஆலையை மூட எந்த முன்னேற்பாடுகளும் நடத்தப்படாததால் மே-22, 2018 அன்று தங்களது 100-வது நாள் போராட்ட தினத்தில், குடும்பம் குடும்பமாக குழந்தைகள், வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பல நூற்றுக்கணக்கானோர் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஒன்றாக பேரணியாகச் சென்றனர். அப்போதுதான் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகுதான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது. 

இன்று இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.  தூத்துக்குடியில் போலீசார் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தவும் நினைவேந்தலுக்கும் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு அமைப்பும் தேவையில்லாமல் பிரச்னை செய்தால் நடவடிக்கை எடுப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இன்று காலை அணுஉலை எதிர்பாளர் சுப.உதயகுமார் கன்னியாகுமரியில் இருந்து நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கிளம்பும்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.  

 

 

இந்நிலையில் திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் '’சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நம் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஓராண்டு நிறைவுநாள் இன்று. நம் மண்ணுக்காகாவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்தவர்களுக்கு என் அஞ்சலி, கழகத் தலைவர் தளபதி அவர்கள் உறுதியளித்தது போல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.'’ என்று கூறியுள்ளார். இவரும் பா.ஜ.கவின் தமிழிசை சௌந்தரராஜனும் தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதே போன்று திமுக தலைவர் ஸ்டாலினும் '’மே 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு ஓராண்டு ஆகிறது. ஆனால், அந்தத் துயரம் மிகுந்த குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்!’’ என்று கூறியிருக்கிறார். 

 

NEXT STORY
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 1-ம் ஆண்டு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - ஸ்டாலின், கனிமொழி உறுதி! Description: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரழந்தவர்களுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை