’சசிகலா சிறையில் இருந்து வெளிவர கோரவில்லை’ - டிடிவி தினகரன்

தமிழகம்
Updated Jun 17, 2019 | 16:11 IST | Times Now

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையே அதிருப்தி நிலவுவதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலையாவார் என்கிற தகவலும் உலவுகிறது. 

ttv dinakaran,டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்   |  Photo Credit: Twitter

சென்னை: சிறையிலிருந்து வெளிவருவதற்கு எந்தவித கோரிக்கையும் சசிகலா விடுக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பரப்பன அக்ரஹார சிறையில் 4 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. அதிமுகவிலிருந்து அவரும், டிடிவி தினகரனும் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், அதிமுக கட்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறி சசிகலாவை பொதுச்செயலாளராக அறிவித்து, துணைப் பொதுச்செயலாளராக பதவியேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார் டி.டி.வி தினகரன். எனினும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமே டிடிவி தினகரன் வெற்றியைச் சந்தித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அமமுக வெற்றியைச் சந்திக்கவில்லை.

இதனால், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையே அதிருப்தி நிலவுவதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலையாவார் என்கிற தகவலும் உலவுகிறது. 

இந்நிலையில், தினகரன் இன்று சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலா வெளியில் வர கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிய தினகரன், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

NEXT STORY
’சசிகலா சிறையில் இருந்து வெளிவர கோரவில்லை’ - டிடிவி தினகரன் Description: சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையே அதிருப்தி நிலவுவதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலையாவார் என்கிற தகவலும் உலவுகிறது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles