ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழப்பு

தமிழகம்
Updated Oct 29, 2019 | 08:24 IST | Times Now

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான் என பேரிடா் மீட்பு மேலாண்மை இயக்குனா் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

sujith
sujith  |  Photo Credit: Twitter

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் இன்று அதிகாலை  மீட்பு படையினர் மீட்டனா்.

திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துறை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இந்த செய்தி  இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். அமைச்சர்கள் விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி சம்பவ சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

பல்வேறு உபகரணங்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை சுஜித்தை மீட்க தமிழகம் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்தனா். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கடந்த 5 நாட்களாக குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. 

ஆனால், எல்லா நம்பிக்கையும் பலன் அளிக்காமல் போய்விட்டது. சுமார் 82 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர்  மீட்டனர். பின்னா் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணப்பாறை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

NEXT STORY