ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த இரண்டு ரயில்கள்! - அடுத்து நடந்தது என்ன?

தமிழகம்
Updated Sep 10, 2019 | 12:37 IST | Times Now

தண்ணீர் ரயிலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் சந்தித்தன.

Train accident averted in Katpadi, காட்பாடியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
காட்பாடியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு 

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் தண்ணீர் ரயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் சந்தித்தன.

ரயில் ஓட்டுநர்கள் உஷாரானதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வெறும் 100 அடி இடைவெளியில் இரு ரயில்களும் நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு காரணமாகவே இதுபோன்ற தவறு நிகழ்ந்திருக்கும் என்று கருதப்பட்டாலும் ரயேல்வே துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

கவனக் குறைவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த தவறு குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு ரயில்களில் ஏதேனும் ஒரு ரயில் வேறு தண்டவாளத்திற்கு தவறாக மாற்றப்பட்டதால் இந்நிகழ்வு நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...