குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

தமிழகம்
Updated Aug 22, 2019 | 22:15 IST | Times Now

குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Group 4 hall ticket released
Group 4 hall ticket released  |  Photo Credit: PTI

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை  www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதை contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 4 hall ticket released

ஹால்டிக்கெட் தொடர்பாக ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு மேல் பெறப்படும் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விவரங்களுக்கு 1800 425 1002 என்ற தொலைபேசி எண்ணையும், contacttnpsc@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...