குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்

தமிழகம்
Updated Jul 08, 2019 | 11:45 IST | Times Now

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

madras high court, சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்  |  Photo Credit: IANS

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேள்வி-பதில் தவறு என தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கான மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறாக உள்ளதாக புகார் எழுந்தது.  இதையடுத்து  குரூப் 1 தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது, 150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டது.  இதற்கான மதிப்பெண்ணை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. 

மேலும், தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டு விக்னேஷின் வழக்கை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 

NEXT STORY
குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட் Description: குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles