சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்

தமிழகம்
Updated Sep 17, 2019 | 15:33 IST | Times Now

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சிறுவன் தலைக்கவசம் அணியாததால் காவல்துறை அதிகாரி பிடித்ததாக வதந்தி பரவியது.

Boy riding cycle held by cop, சைக்கிளில் சென்ற சிறுவனை பிடித்த ஏரியூர் காவல்துறையினர்
சைக்கிளில் சென்ற சிறுவனை பிடித்த ஏரியூர் காவல்துறையினர்  |  Photo Credit: Twitter

தருமபுரி: மிதிவண்டியில் சென்ற சிறுவனை தலைக்கவசம் அணியாததற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடித்து வைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அச்சம்பவத்தின் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது முதல் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த அபராதம் விதித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மிதிவண்டியில் வந்த சிறுவனை காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தி விசாரிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

சிறுவன் தலைக்கவசம் அணியாததால் தான் காவல்துறை அதிகாரி பிடித்ததாக வதந்தி பரவியது. இந்நிலையில், அச்சிறுவன் இரு கைகளையும் எடுத்துவிட்டு வேகமாக மிதிவண்டி ஓட்டியதால் அவனை எச்சரிக்கும் விதமாக வண்டியுடன் சிறுவனையும் பிடித்து வைத்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனை ஒரு மணி நேரம் காக்க வைத்து பிறகு எச்சரித்து அனுப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

NEXT STORY