நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டு விட்டது: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

தமிழகம்
Updated Jul 16, 2019 | 17:10 IST | Times Now

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது: மத்திய அரசு
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது: மத்திய அரசு  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில்நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் திருத்த மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீட் விலக்கு மசோதாக்கள் 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை துணை செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் விலக்கு மசோதாவை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்தி நிறுத்தி வைத்ததாகவும், அதன்பிறகு மசோதா 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...