கேரள நதிநீர் பங்கீடு விவகாரம்; தமிழக அரசு குழுக்கள் அமைப்பு

தமிழகம்
Updated Oct 18, 2019 | 11:07 IST | Times Now

தமிழக-கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு செய்ததன் அடிப்படையில், பரம்பிகுளம்-ஆழியாறு மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் தொடர்பான தமிழக அரசின் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Edapppadi K Palaniswami, Pinarayi Vijayan, எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன்
எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன்  |  Photo Credit: Twitter

சென்னை: கேரளா உடனான நதிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு இரண்டு குழுக்கள் அமைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்போது தமிழக அரசு சார்பில் அரசு செயலாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், பரம்பிகுளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தம் குறித்து ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் குறித்து மற்றொரு குழுவும் தமிழ்நாடு-கேரளா அரசுகளின் செயலாளர்கள் நிலையில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இரு குழுக்களின் உறுப்பினர்களை அறிவித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., காவேரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் டாக்டர் ஆர்.இளங்கோவன், கண்காணிப்புப் பொறியாளர் பொ.முத்துசாமி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஏ.முனாவர் சுல்தானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதே போல, பாண்டியாறு-புன்னபுழா திட்டத்திற்கான குழுவில் க.மணிவாசன், ஆர்.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஈ.தமிழரசன், கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சிவலிங்கம் மற்றும் ஏ.முனாவர் சுல்தானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

NEXT STORY