பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர்

தமிழகம்
Updated Aug 13, 2019 | 10:01 IST | Times Now

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணை திறப்பு  |  Photo Credit: Twitter

கர்நாடகாவிலும் கேரளாவிலும் கனமழை பெய்துவருகிறது. இதனால் அங்கிருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து தமிழகத்துக்கும் தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப் படுகிறது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து ஒகேனக்கிலுக்கு தண்ணீர் அதிக அளவில் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அங்கே அவ்வளவு தண்ணீர் வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவே 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகமானது. இன்று எதிர்பார்த்தது போலவே மேட்டூர் டேம் 100 அடியை எட்டியது. 4 நாட்களுக்கு முன்பு இந்த அளவு 54 அடி என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்காக மேட்டுர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நீ இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஆனால் இன்று மேட்டுர் அணை 100 அடியை எட்டியதால் பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி அணையை திறந்துவைத்தார். முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு 10 ஆயிரம் கன அடியாக படிப்படியாக உயர்த்தப்படும்.அணையைத் திறந்து வைத்த முதல்வர், இந்தத் தண்ணீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார். மேலும் காவிரி - கேதாவரி இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றும். இதனால் கூடுதலாக நீர் கிடைக்குமென்றார்.  மேட்டூரில் இருந்து வரும் காவிரி நீர் இன்னும் 2 நாட்களில் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் Description: பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...