நாளை மறுநாள் முதல்வா் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகம்
Updated Nov 17, 2019 | 13:07 IST | Times Now

முதல்வர் தலைமையில் செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

Tamil Nadu Assembly
தலைமைச் செயலகம்  |  Photo Credit: Twitter

சென்னை: முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, மாநில தகவல் ஆணையர் நியமனம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் மேற்கொள்வது தொடர்பாக இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

NEXT STORY