TN 12th Result 2019: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! 91.03% தேர்ச்சி சதவிகிதம்

தமிழகம்
Updated Apr 19, 2019 | 11:07 IST | Times News Network

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகிறது. dge.tn.gov.in, tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in. ஆகிய தளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

TN 12th Result 2019
TN 12th Result 2019  |  Photo Credit: Representative Image

 

  • தமிழ்நாட்டில் மொத்தம் 7,083 பள்ளிகளில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருக்கிறது.
     
  •  இயற்பியலில் 93.89% , வேதியலில் 94.88%, உயிரியலில் 96.05%, கணிதத்தில் 96.25%, தாவரவியலில் 89.98%, விலங்கியலில் 89.44%, கணினி அறிவியலில் 95.27%, வணிகவியலில் 91.23%, கணக்குப் பதிவியல் 92.41% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
     
  • அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் முதல் இடத்தைப் பிடித்தது. திருப்பூரில் தேர்ச்சி சதவிகிதம் 95.37%, அடுத்ததாக ஈரோட்டில் 95.23% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளர். 95.15% பெற்று மூன்றாம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. 
     
  • ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம்  91.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவிகிதமும் மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 

இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 8.87 லட்சம் மாணவ மாணவியர் ப்ளஸ் 2 தேர்வை எழுதினர். இவர்களது விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்து இன்று அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த வருடம் வழக்கம்போல் இணையத்தில் வெளியாவதோடு மாணவர்களின் குறிப்பிட்டிருக்கும் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவு விவரம் குறுஞ்செய்தி மூலமாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிவுகளைப் பேட்டி, அறிவிப்பு மூலம் தெரிவிக்க இயலாது என்று பள்ளிக்கல்வித் துறை கூறியது குறிப்பிடத்தக்கது. தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் மறுதேர்வு நடைபெற உள்ளது. 

தேர்வு முடிவுகளை tnresults.nic.in  பார்க்கலாம்.

 

 

NEXT STORY
TN 12th Result 2019: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! 91.03% தேர்ச்சி சதவிகிதம் Description: தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகிறது. dge.tn.gov.in, tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in. ஆகிய தளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
Loading...
Loading...
Loading...