இதுவே முழுமையான வெற்றி: ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

தமிழகம்
Updated Apr 19, 2019 | 13:02 IST | Times Now

உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள் என ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MNM president Kamal hassan, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும் என ப்ளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவிகள் ப்ளஸ் 2 தேர்வை கடந்த மாதம் எழுதினர்.  தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு இத்தேர்வின் முடிவுகள் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதில், தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவிதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 92.94 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ப்ளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள். இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும். உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள். நாளை நமதே என்கின்ற நல்வாழ்த்துக்களுடன் உங்கள் நான். என கமல்ஹாசன் கூறியுள்ளார். 

NEXT STORY
இதுவே முழுமையான வெற்றி: ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து Description: உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள் என ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...