வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும்: சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம்
Updated Aug 15, 2019 | 10:14 IST | Times Now

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

chief Minister Edappadi K. Palaniswami
chief Minister Edappadi K. Palaniswami  |  Photo Credit: YouTube

சென்னை: 73-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதேபோல், தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்திற்கு காலை 9 மணிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை மற்றும் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதியாக உள்ளது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியை திணிக்கக் கூடாது. தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதை போல் நீர் மிகை மாநிலமாக விரைவில் உருவாகும். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது.  தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து16 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர் குடும்ப ஓய்வூதியம் ரூ.7,500-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படுகிறது. கங்கை சீரமைப்பு திட்டம் போல் காவிரி ஆற்றை சீரமைக்க 'நடந்தாய் வாழி காவேரி' என்ற திட்டத்தினை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உதயமாகிறது. கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது.

NEXT STORY
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும்: சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Description: வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...