’அதிமுகவிலிருந்து விலகுகிறேன்’ - தோப்பு வெங்கடாசலம் அதிரடி முடிவு!

தமிழகம்
Updated May 20, 2019 | 20:09 IST | Times Now

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் மறைந்த முதல்வருமான ஜெயலலிதா இருந்தபொழுது கட்சிக்குள் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.

tamil nadu, தமிழ்நாடு
தோப்பு வெங்கடாசலம்  |  Photo Credit: Twitter

சென்னை: அதிமுக கட்சியில் இருந்து எல்லா கட்சி பொறுப்புகளிலும் விடுபடுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வானவர் அதிமுகவின் தோப்பு கே.வெங்கடாசலம்.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் மறைந்த முதல்வருமான ஜெயலலிதா இருந்தபொழுது கட்சிக்குள் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இவரது பொறுப்புகள் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார் தோப்பு வெங்கடாசலம். அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து விலகுவது குறித்து விரைந்து முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

NEXT STORY
’அதிமுகவிலிருந்து விலகுகிறேன்’ - தோப்பு வெங்கடாசலம் அதிரடி முடிவு! Description: அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் மறைந்த முதல்வருமான ஜெயலலிதா இருந்தபொழுது கட்சிக்குள் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை