ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

தமிழகம்
Updated May 15, 2019 | 17:01 IST | Times Now

கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இரண்டு தாள்கள் அடங்கிய இத்தகுதித்தேர்வு நாள்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

tamil nadu, தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு  |  Photo Credit: Getty Images

சென்னை: தமிழகத்தில் ஆசிரியப் பணிகளுக்கான தகுதித் தேர்வாக நடத்தப்படும் TET தேர்வு வருகின்ற ஜூன் 8 மற்றும் 9ம் தேதியன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் முடித்தவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கிட்டதட்ட 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு மேலானவர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. 

இதற்கான அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியானது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இரண்டு தாள்கள் அடங்கிய இத்தகுதித்தேர்வு நாள்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

TET எனப்படும் இந்த தகுதித் தேர்வு வருகின்ற ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் ஜூன் 8ம் தேதியன்றும், இரண்டாம் தாள் ஜூன் 9ம் தேதியன்று நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வுகள் மதியம் 1 மணிக்கு முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

NEXT STORY
ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! Description: கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இரண்டு தாள்கள் அடங்கிய இத்தகுதித்தேர்வு நாள்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola