தகுதித் தேர்வில் தோல்வியுற்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யத் தடை - உயர்நீதிமன்றம்

தமிழகம்
Updated May 16, 2019 | 15:05 IST | Times Now

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தனர்.

tamil nadu, தமிழ்நாடு
பள்ளிக் கல்வித்துறை  |  Photo Credit: Twitter

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பணியிலிருக்கும் ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தனர். அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தங்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்துள்ளனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்பு கிடைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருக்கின்றனர். அவர்கள் உள்ளிட்ட தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

இதனை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். அதுவரை அவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
தகுதித் தேர்வில் தோல்வியுற்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யத் தடை - உயர்நீதிமன்றம் Description: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola