தமிழகம் மற்றும் புதுவையில் மே 23-ல் அனைத்து மதுக் கடைகளுக்கும் விடுமுறை

தமிழகம்
Updated May 21, 2019 | 15:35 IST | Times Now

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

Tasmac shops and bars to be shut down on may 23rd
மே 23-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை  |  Photo Credit: Facebook

சென்னை: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்து சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.  மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இத்தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே-23 ஆம் தேதியும் அதற்கு மறுநாளும் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
தமிழகம் மற்றும் புதுவையில் மே 23-ல் அனைத்து மதுக் கடைகளுக்கும் விடுமுறை Description: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
Loading...
Loading...
Loading...