சென்னையில் 19 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. இரண்டு நாட்கள் மட்டுமே!

தமிழகம்
Updated Oct 10, 2019 | 20:13 IST | Times Now

சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

File photo
File photo  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மகாபலிபுரம் சாலை பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஜீ ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை நண்பகல் 12.30 மணியளவில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். பின்னர் ஹெலிகாப்டரில் கோவளம் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள தாஜ் பிஷர் மேன் கவ் ஹோட்டலில் தங்குகிறார். 

இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY