10 மாவட்டங்களில் கன மழை, இன்னொரு பக்கம் சுடும் வெயில் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated May 15, 2019 | 08:07 IST | Times Now

சென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu weather report - chances for heavy rain in 10 districts
tamilnadu weather report - chances for heavy rain in 10 districts  |  Photo Credit: Getty Images

 தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் குறிப்புட்டுள்ளதன்படி சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தருமபுரி, கோவை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 50 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என தெரிகிறது.

சென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெயிலின் தாக்கமும் இல்லாமல் இல்லை. நேற்று தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகினி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் சுட்டெரித்தது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வரும் சனிக்கிழமை இதே நிலைமை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் வெயிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

NEXT STORY
10 மாவட்டங்களில் கன மழை, இன்னொரு பக்கம் சுடும் வெயில் - வானிலை ஆய்வு மையம் Description: சென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola