இன்னும் ரெண்டு நாளுக்கு மழை இருக்காம்!

தமிழகம்
Updated Jul 16, 2019 | 09:03 IST | Times Now

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நீடிக்கும்
தமிழகத்தில் மழை நீடிக்கும்  |  Photo Credit: Twitter

நேற்று தமிழகத்தை பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பட் சலனம் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் திங்கட்கிழமை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் தேனாம்பேட்டை, அசோக் பில்லர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தண்ணீர் இல்லாத சமயம் என்பதாலும் வெக்கை காரணமாகவும் மிகுந்த சிரமமப்பட்ட மக்கள் எப்போது மழை வரும் என்று காத்துக்கொண்டு இருந்ததால் இந்த மழை அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருந்தது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...