தேர்தல்2019: வேலூரில் தேர்தல் ரத்து இல்லை, தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

தமிழகம்
Updated Apr 16, 2019 | 17:05 IST | Times Now

ஐடி ரெய்டால் வேலூரில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகத் வெளியான தகவலை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

election commission
தேர்தல் ஆணையம்  |  Photo Credit: Times Now

வேலூரில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 11-ஆம் தேதி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 18-ஆம் தேதி 2-ஆம் கட்டமாகத் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில் நேற்று இரவுமுதல் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தேர்தல் ஆணையம், வேலூரில் நடைபெற்ற ஐடி ரெய்டால் வேலூரில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

தி.மு.க பொருளாலர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி ஆகிய இடங்களிம் பறக்கும்படையினரால் ஐடி ரெய்டு நடைபெற்றது. அவருக்கு நெருக்கமானவர் ஒருவரின் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

இந்த ஐடி ரெய்டால் வேலூரில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகத் வெளியான தகவலை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது. இன்று மாலை ஐந்து மணியுடன் பிரச்சாரம் முடிவுபெறும் நிலையில், கட்சித் தலைவர்கள் முழூவீச்சில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

NEXT STORY
தேர்தல்2019: வேலூரில் தேர்தல் ரத்து இல்லை, தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! Description: ஐடி ரெய்டால் வேலூரில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகத் வெளியான தகவலை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...