அமெரிக்கா பயணம் முடிந்து துபாய் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகம்
Updated Sep 07, 2019 | 17:14 IST | Times Now

செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களை துபாயில் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10-ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami, Anaheim Mayor Harry Sidhu, முதல்வர் பழனிசாமி, அனாஹெய்ம் நகர மேயர் ஹாரி எஸ்.சித்து
முதல்வர் பழனிசாமி, அனாஹெய்ம் நகர மேயர் ஹாரி எஸ்.சித்து  |  Photo Credit: Twitter

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுடன் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் புறப்படுகிறார். அங்கு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய துணை தூதரகம் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

பின்னர், துபாய் தொழில் முனைவோர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களை துபாயில் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10-ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

சென்ற ஆகஸ்டு 28-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதல்வர், செப்டம்பர் 2 முதல் 7-ஆம் தேதி வரை அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

செப்டம்பர் 2-ஆம் தேதி அமெரிக்காவின் பஃபல்லோ நகரில்

கால்நடை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பங்களை சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய இருக்கும் கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் முதல்வர் உடன் சென்றனர்.

செப்டம்பர் 3-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக ‘யாதும் ஊரே’ திட்டத்தினை துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. செப்டம்பர் 4-ஆம் தேதி கலிபோர்னியாவிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செப்டர்ம்பர் 5-ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மாசில்லா எரிசக்தி உற்பத்தி நிறுவனமான ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். பிறகு, மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை சென்று பார்வையிட்ட முதல்வர் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 6-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் பகுதியின் அனாஹெய்ம் நகருக்கு சென்ற முதல்வரை நகர மேயர் ஹாரி எஸ்.சித்து வரவேற்றார். இருவரும் இணைந்து அந்நகரில் உள்ள கழிவு நீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டனர். அப்போது அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் க.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

NEXT STORY
அமெரிக்கா பயணம் முடிந்து துபாய் செல்கிறார் முதல்வர் பழனிசாமி Description: செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களை துபாயில் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10-ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை