தமிழக இடைத்தேர்தல் 2019 : வெற்றி யாருக்கு? கடும் போட்டியில் திமுக - அதிமுக

தமிழகம்
Updated May 23, 2019 | 13:33 IST | Times Now

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தன் சகோதரரான திமுக வேட்பாளர் மகாராஜனை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  |  Photo Credit: YouTube

சென்னை: தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 தொகுதிகளில் திமுகவும், 10 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுமளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், திருவாரூர், நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், சாத்தூர், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஓசூர், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 14 தொகுதிகளில் திமுகவும், 08 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.  

திமுக முன்னிலையில் உள்ள தொகுதிகள்:

திருவாரூர், தஞ்சாவூர், குடியாத்தம், ஆம்பூர், பெரியகுளம், ஓசூர், பரமக்குடி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், பூந்தமல்லி, பெரம்பூர்,திருப்போரூர்,சோளிங்கர், ஆண்டிப்பட்டி ஆகிய 14 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னனிலையில் உள்ளனர்.

அதிமுக முன்னிலையில் உள்ள தொகுதிகள்:

பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், சூலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னனியில் உள்ளனர்.

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் லோகிராதன் 3970 வாக்குகளும் திமுக வேட்பாளர் மகராஜன் 3969 வாக்குகளும் அமமுக வேட்பாளர் 1185 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதிமுக வேட்பாளர் லோகிராஜனும் திமுக வேட்பாளர் மகாராஜனும் சகோதரர்கள். இவர்கள் இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசம் ஒரே ஒரு ஓட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY