தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சியைத் தக்க வைக்கிறது அஇஅதிமுக!

தமிழகம்
Updated May 23, 2019 | 22:52 IST | Times Now

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக 13 இடங்களிலும், அஇஅதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

Tamil Nadu by elections 2019
Tamil Nadu by elections 2019  |  Photo Credit: ANI

சென்னை: தமிழக இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அஇஅதிமுக 09 இடங்களிலும் முன்னிலையில் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கான தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் நிலைமை நிலவுவதால் ஆட்சியைத் தக்க வைக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே-19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு நடந்த 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியைத் தவிர 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதோடு காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 36,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

10.51 pm: சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி 1,00,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

6:15 pm: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின்.

 

 

6:10 pm: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின்.

 

 

5:46: pm: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1,577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

5:43 pm: நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார்

5:38 pm: விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றார்.

5:02 pm: சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சம்பத் வெற்றி பெற்றார்.

4:20 pm: குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன் வெற்றி

3:30 pm: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை.

3:10 pm: ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றிப்பெற்றார்.

2:35 pm: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணன் 39,243  வாக்குகள் பெற்று முன்னிலை.

1:55 pm: மானாமதுரை  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

1:55 pm: மானாமதுரை  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

1:37 pm:விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 11 சுற்றுகள் முடிவில் 47,632வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 24,302 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். அமமுக வேட்பாளர் ஜோதிமணி 5,166 வாக்குகள் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர் மார்க்கண்டேயன் 14, 980 வாக்குகள் பெற்றுள்ளார். 

1:35 pm: நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

1:30 pm: சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 5133 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

1:10 pm: விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 10 சுற்றுகள் முடிவில் 37,963 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 22, 659 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். அமமுக வேட்பாளர் 4652 வாக்குகள் பெற்றுள்ளார்.

1:05 pm: 10 சுற்றுகள் முடிவில் சோளிங்கர் தொகுதியில் திமுக வேட்பாளர் அசோகன் 41,746 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சம்பத் 49,929 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

1:02 pm: திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணன் 32029 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் முனியாண்டி 28,425 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் மகேந்திரன் 13,358 வாக்குகள் பெற்றுள்ளார்.

12:04 pm: ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர் வாக்குவாதம்

11:50 am: சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 6 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 22 ஆயிரத்தி 180 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சீனிவாசன் 19 ஆயிரத்தி 299 வாக்குகள் பெற்றுள்ளார்.

11:47 am: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகய்யா 3 சுற்றுகள் முடிவில் 5161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக - 13,632, அதிமுக - 8471, அமமுக - 4,508 வாக்குகள் பெற்றுள்ளன.

11:45 am: பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 623 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக 7546, திமுக -6923, அமமுக -438, நாம் தமிழர் - 273 வாக்குகள் பெற்றுள்ளன.

11: 41 am: நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி 1729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவர் தற்போதைய நிலவரப்படி 13394 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக- 11665, அமமுக - 1576 வாக்குகள் பெற்றுள்ளன.

11:40 am: ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக - 12084, திமுக - 9987, அமமுக -2926 வாக்குகள் பெற்றுள்ளன

11: 20 am: 5 சுற்றுகள் முடிவில் விளாத்திகளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 10507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

10:40 am: திமுக முன்னணி எதிரொலி - அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 

 

9:45 am: பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி முன்னிலை 

9:40 am: ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் முன்னிலை

9:35 am குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன் முன்னிலை 

9:35 am: சோளிங்கர்  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை

9:35 am: திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை

9:35 am: பெரம்பூர்  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.வி.சேகர் முன்னிலை

9:34 am: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை

9:31 am: மானாமதுரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் முன்னிலை

9:30 am: விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் முன்னிலை

9:25 am: ஓசூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலை 

9:20 am: நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

9:09 am: சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை

8:47 am: சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 7607 வாக்குகள் பெற்று  முன்னிலை

8:30 am: ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் முன்னிலை 

8:50 am: தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நீலமேகம் முன்னிலை

8:00 am: தமிழகத்தில் 22 சட்டமன்றத் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 


 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சியைத் தக்க வைக்கிறது அஇஅதிமுக! Description: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக 13 இடங்களிலும், அஇஅதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை