தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு தினங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated Apr 20, 2019 | 10:53 IST | Times Now

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Tamil nadu and puducherry likely to get rain
கோப்புப்படம்  |  Photo Credit: Thinkstock

சென்னை: அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைகின்றனர். 

இந்தநிலையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அப்போது ஈரப்பத காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பல நகரங்களில் வெயில் குறைந்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை, வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, திருச்சி சேலம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, நாமக்கல்லில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

நெல்லை, வேலூர், தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. மேலும் வெயிலின் அளவு தற்போது இருப்பதை விடவும் 2 டிகிரி செல்சியஸ் குறையும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

NEXT STORY
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு தினங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் Description: சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...