தங்கம் வென்ற இளம் நீச்சல் வீரர் சென்னை விபத்தில் பலி - விடுமுறைக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்

தமிழகம்
Updated May 15, 2019 | 14:39 IST | Times Now

இவர் ஏற்கனவே 2010-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கிரிக்கெட் பேட்டால் தாக்கப்பட்டு பின் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

swimmer M.B. Balakrishnan dies in chennai
swimmer M.B. Balakrishnan dies in chennai  |  Photo Credit: Twitter

2010-ஆம் ஆண்டு தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் வீரர் நேற்று இரவு நடைபெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 29 வயதான இவர் ஒரு நீச்சல் வீரர். 2010-ஆம் ஆண்டு தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.தற்போது அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றிவரும் பாலகிருஷ்ணன், சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.

நேற்று இரவு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனது ரேஸர் பைக்கில்  உடன் தோழியுடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது உடன் வந்துகொண்டு இருந்த லாரியின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்தவர் அதிர்ஷடவசமாகக் காயங்களுடன் தப்பினார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் 2010-ஆம் ஆண்டு தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பின்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்குத் தேர்வானார். ஆனால் சென்னையில் அதிகாலை பயிற்சி முடிந்து வந்துகொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் கிரிக்கெட் பேட்டால் தாக்கப்பட்டு பின் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற பாலகிருஷ்ணன் விடுமுறைக்கு வந்த இடத்தில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY