கேரள, கர்நாடக மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் உதவி

தமிழகம்
Updated Aug 15, 2019 | 16:30 IST | Zoom

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள கேரள, கர்நாடக மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ. 10 லட்சம் உதவித்தொகை வழங்கியுதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Actors Suriya, Karthi
நடிகர்கள் சூர்யா, கார்த்தி  |  Photo Credit: Twitter

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள கேரள, கர்நாடக மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவிலும் கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கேரளாவில் இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 2.2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களும் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டமும் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளன. கர்நாடகத்தில் இதுவரை இருபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள கேரள, கர்நாடக மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். இந்த தகவலை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...