மாநில தலைமை தோ்தல் ஆணைய செயலாளா் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகம்
Updated Nov 14, 2019 | 21:17 IST | Times Now

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை திடீரென மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Nadu State Election Commission office
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  |  Photo Credit: Twitter

சென்னை: மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த பழனிச்சாமி, டவுன் பஞ்சாயத்து இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார். 

சென்னை இணை ஆணையர் கோவிந்த்ராவ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் சுகாதாரத்துறை இணைப் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல். சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்.

உணவு மற்றும் நுகர்பொருள் ஆணையராக இருந்த ஆர்.கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார்.

பள்ளிக் கல்வித் துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY