'வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ ஒதுங்கிய நீதிபதி சசிதரன் - ஸ்டெர்லைட் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!

தமிழகம்
Updated Jun 11, 2019 | 21:02 IST | Times Now

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா அளித்த மனுவை தன்னால் விசாரிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.

High court, உயர்நீதிமன்றம்
மாதிரிப்படம்  |  Photo Credit: Twitter

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா அளித்த மனுவை தன்னால் விசாரிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதி சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வுக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி அதற்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்து, உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இதில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி சசிதரன் இந்த வழக்கில் இருந்து விலகினார். இதனால் உயர்நீதிமன்றப் பதிவாளர் இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

NEXT STORY
'வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ ஒதுங்கிய நீதிபதி சசிதரன் - ஸ்டெர்லைட் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்! Description: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா அளித்த மனுவை தன்னால் விசாரிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை