காவல் ஆய்வாளரை திட்டிய விவகாரம்: காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகம்
Updated Aug 13, 2019 | 17:11 IST | Times Now

அத்திவரதர் தரிசனத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி கடுமையாக திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

Kancheepuram District Collector Ponnaiah
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்திற்காக முக்கியஸ்தர்கள் செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சீறுடை அணிந்த காவல் ஆய்வாளர் ஒருவர் வி.ஐ.பி.க்கள் செல்லும் வரிசையில் உரிய நுழைவுச்சான்று பெறாத சிலரை அனுமதித்ததாகக் கூறி மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி கடுமையாக திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

உணர்ச்சிபூர்வமாக பேசிய வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பிற காவலர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் அவமதித்தது மனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் இரண்டு வாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

NEXT STORY
காவல் ஆய்வாளரை திட்டிய விவகாரம்: காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் Description: அத்திவரதர் தரிசனத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி கடுமையாக திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...