இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி, சென்னையில் பலத்த பாதுகாப்பு!

தமிழகம்
Updated Apr 26, 2019 | 09:14 IST | Times Now

இது தவிர கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படை, இந்திய கப்பல் படை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 

இலங்கை குண்டுவெடிப்பு
இலங்கை குண்டுவெடிப்பு   |  Photo Credit: AP

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பிறகும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அதனால் மேலும் குண்டுவெடிப்பு ஏற்படலாம் என்று அச்சத்தில் உள்ளனர் மக்கள் அனைவரும். 

யாரும் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என இலங்கை பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்புக் கருதி அரசு ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. தற்போது யார் கொலை செய்தார்கள் என்று  இலங்கை அரசு ஒன்பது பேரின் படங்களை வெளியிட்டு அவர்களைப் பற்றித் தெரிந்தால் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பதட்டநிலை தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. குறிப்பாகத் தலைநகரமான சென்னையில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம், எக்மோர் ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாகக் கண்கானிக்கப்படுகின்றனர். முக்கிய தேவாலயங்கள், கோயில்கள், மற்ற ரயில் நிலையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைப்போலவே சென்னை விமான நிலையத்திலும் கடும் பாதுகாப்பு விதிக்கப்பட்டு இருக்கிறது. 

இது தவிர கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படை, இந்திய கப்பல் படை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

NEXT STORY
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி, சென்னையில் பலத்த பாதுகாப்பு! Description: இது தவிர கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படை, இந்திய கப்பல் படை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola