தென் மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம்
Updated May 16, 2019 | 07:32 IST | Times Now

2017-2018 ம் ஆண்டில் வானிலை ஆய்வு மையம் கணித்த அதே தேதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்தது.

ஜூன் 6-ல் தென் மேற்கு பருவமழை
ஜூன் 6-ல் தென் மேற்கு பருவமழை  |  Photo Credit: Twitter

சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த முறை 5 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 2019-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை புள்ளியியல் ஆய்வின்படி கேரளாவில் சற்று தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக ஜூன் 6-ஆம் தேதி தொடங்கும் எனவும், அந்தமான் நிகோபர் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி அல்லது 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், பருமமழை 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது. 2017-2018 ம் ஆண்டில் வானிலை ஆய்வு மையம் கணித்த அதே தேதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்தது.தென் மேற்கு பருவமழை காலங்களில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும்.


 

NEXT STORY
தென் மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Description: 2017-2018 ம் ஆண்டில் வானிலை ஆய்வு மையம் கணித்த அதே தேதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola