கமலை இழிவுபடுத்திய நமது அம்மா நாளிதழ் - சமூகவலைதளங்களில் எழும் கண்டனங்கள்!

தமிழகம்
Updated May 15, 2019 | 11:19 IST | டைம்ஸ் நவ் தமிழ்

கமலை விமர்சித்தது மட்டுமல்லாமல் ஒரு அப்பா மகளுக்கு முத்தம் கொடுக்கும் தருனத்தைப் போட்டும் கேவலப்படுத்தி இருப்பது மிகவும் கண்டத்துக்குரியது என்று பத்திரிகையாளர்கள் உட்பட பல கண்டனங்களைத் தெரிவித்து வருகின்

namadhu amma
namadhu amma   |  Photo Credit: Twitter

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய மக்கள் நீதி மய்ய  தலைவர் கமல்ஹாசன்  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் பேசி இருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் என்று பலரும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். திராவிடக்கட்சிகள் கமலுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு அதிமுகவின் நாளிதழ் கமலைக் கடுமையாக விமர்சனம் செய்து இன்று வெளியான நாளிதழில் ஒரு கட்டுரையைப் பதிவிட்டுள்ளது. மிகவும் இழிவாகக் கமலைக் குறிப்பிட்டுள்ளதால் சமூகவலைதளங்களில் இந்தக்கட்டுரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கிவருகிறது. 

 

இந்தக் கட்டுரையில் கமலை விமர்சித்தது மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு அப்பா முத்தம் கொடுக்கும் தருனத்தைப் போட்டும் கேவலப்படுத்தி இருப்பது மிகவும் கண்டத்துக்குரியது என்று பத்திரிகையாளர்கள் உட்பட பல கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கமல்ஹாசன் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் பிரச்சினையை உருவாக்கியதாகவும் 295ஏ பிரிவின் கீழும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

NEXT STORY
கமலை இழிவுபடுத்திய நமது அம்மா நாளிதழ் - சமூகவலைதளங்களில் எழும் கண்டனங்கள்! Description: கமலை விமர்சித்தது மட்டுமல்லாமல் ஒரு அப்பா மகளுக்கு முத்தம் கொடுக்கும் தருனத்தைப் போட்டும் கேவலப்படுத்தி இருப்பது மிகவும் கண்டத்துக்குரியது என்று பத்திரிகையாளர்கள் உட்பட பல கண்டனங்களைத் தெரிவித்து வருகின்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola