தண்ணீ இல்ல...விளைச்சல் இல்ல - எகிறும் ‘சின்ன வெங்காயம்’ விலை!

தமிழகம்
Updated Jun 17, 2019 | 18:53 IST | Times Now

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாகுபடியாக விளைவிக்கப்படுகிறது சின்ன வெங்காயம். பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய சின்னவெங்காய விளைச்சலுக்கு பேர் போனது தர்மபுரி.

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம்  |  Photo Credit: Twitter

தர்மபுரி: தமிழகத்தில் நிலவி வருகின்ற கடும் வறட்சியால் தர்மபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாகுபடியாக விளைவிக்கப்படுகிறது சின்ன வெங்காயம். பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய சின்னவெங்காய விளைச்சலுக்கு பேர் போனது தர்மபுரி.

இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் விளைச்சல் கடும் சரிவைக் கண்டுள்ளது.

அதேபோன்று, மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் ரூபாய் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான சின்னவெங்காயத்தின் விலை, ரூபாய் 40 முதல் 50 வரை உயர்ந்துள்ளது.

எனினும், கடும் வறட்சியிலும் வெங்காயத்தை விளைவித்த விவசாயிகளுக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். எனினும், தண்ணீரின் விலை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து பயிர் செய்வதும் கேள்விக்குறியாக உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

NEXT STORY
தண்ணீ இல்ல...விளைச்சல் இல்ல - எகிறும் ‘சின்ன வெங்காயம்’ விலை! Description: தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாகுபடியாக விளைவிக்கப்படுகிறது சின்ன வெங்காயம். பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய சின்னவெங்காய விளைச்சலுக்கு பேர் போனது தர்மபுரி.
Loading...
Loading...
Loading...