நடுவானில் கோளாறான சிங்கப்பூர் விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 170 பயணிகள்

தமிழகம்
Updated May 20, 2019 | 11:09 IST | Times Now

மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Singapore plane makes emergency landing at Chennai airport
Singapore plane makes emergency landing at Chennai airport  |  Photo Credit: Times Now

சென்னை: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.40 மணிக்கு 170 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்டது ஸ்கூட் ஏர்வேஸ் டிஆர் 567 விமானம். அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பைலட் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

Aircraft makes emergency landing at Chennai airport after an engine spark

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவை அறிந்த பைலட் உடனடியாக விமானத்தை தரையிறக்கம் செய்ததால் விமானத்தில் இருந்த 170 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Aircraft makes emergency landing at Chennai airport after an engine spark

இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEXT STORY
நடுவானில் கோளாறான சிங்கப்பூர் விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 170 பயணிகள் Description: மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை