ஒரு வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவு! - தங்கம் பவுனுக்கு ரூ 504 குறைந்தது

தமிழகம்
Updated May 04, 2019 | 09:12 IST | Twitter

வெள்ளியும் ஒரு கிலோ நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு.

gold rate reduced in chennai
தங்கம் விலை குறைவு  |  Photo Credit: Getty Images

வழக்கத்துக்கு மாறாக அட்ஷய திருதியை நெருங்கும் வேளையில் தங்கத்தில் விலை குறைந்துகொண்டே வருகிறது. வரும் மே-7 ஆம் தேதி அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டீல் ஒரு கிராமாவது தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் வருடாவருடம் நகைக்கடைகளில் கி.மீ கணக்கில் நின்றாவது தங்கம் வாங்கிச் செல்வார்கள். திருமணங்களக்குக் கூட அன்றைய தினம் சேத்து வைத்தப் பணத்தைக் கொண்டு நகைகளை வாங்கி வைத்து விடுவார்கள்.

அதனால் எப்போதும் தங்கம் ஏறு முகத்திலேயே இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் பவுனுக்கு 504 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் 27-ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 24,440 வுக்கு இருந்த தங்கம் நேற்று ரூபாய் 23,936 க்கு விற்கப்பட்டது. இது சென்ற வாரத்தை விட 504 ரூபாய் குறைவு. 

வெள்ளியும் அதே போல ஒரு கிலோ ரூபாய் 40,700 க்கு விற்க்கபட்டது. நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு. சர்வதேச சந்தையில் சில தினங்களாக நிலவி வரும் ஏற்ற இறக்கமே இதற்கு காரணம் என விற்பனையாளரகள் தெரிவிக்கிறார்கள்.

NEXT STORY
ஒரு வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவு! - தங்கம் பவுனுக்கு ரூ 504 குறைந்தது Description: வெள்ளியும் ஒரு கிலோ நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola