ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தமிழகம்
Updated Jun 13, 2019 | 17:17 IST | Times Now

கோவையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருவாய்த்துறை மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

second day NIA conducted raids in Coimbatore
கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை   |  Photo Credit: ANI

கோவை: கோவை உக்கடம் பகுதியில் இரண்டாவது நாளாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு நுண்ணறிவு போலீசார் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து கேரளா மற்றும் தென் இந்திய மாநிலங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன.

இதையடுத்து இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுடன் கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். அசாரூதின், அக்ரம் ஜிந்தா, ஷேக் இதயதுல்லா, அபுபக்கர், சதாம் உசேன், இப்ராஹிம் ஆகியோரது வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென்டிரைவ்கள், 3 லேப்டாப்கள், 6 மெமரி கார்டுகள், 300 ஏர்கன் குண்டுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அசாரூதினை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், 5 பேரை கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகத்திற்கு இன்று விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் மீண்டும் சிறப்பு நுண்ணறிவு போலீசார் சோதனையை தொடங்கினர். கோவை, உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடையைச் சேர்ந்த ஷபியுல்லா, அன்பு நகரைச் சேர்ந்த ஷாஷகான் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. வருவாய் துறையினர் முன்னிலையில் கோவை மாநகர போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

NEXT STORY
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை Description: கோவையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருவாய்த்துறை மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை