வேதரண்யத்தில் கடல் சீற்றம், 5000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தமிழகம்
Updated May 26, 2019 | 08:50 IST | Times Now

வேதரண்யத்தில் கடல் மிகுந்த கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

sea outrage in vedaranyam
sea outrage in vedaranyam  |  Photo Credit: Getty Images

நேற்று முதல் வேதரண்யம் பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கோடீயங்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய கிராமங்களில் சிமார் ஐயாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கும் தொழிலில் இருக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் சீற்றத்தால் இன்று அவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 700க்கும் மேற்பட்ட படகுகள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தென்பேற்குப் பருவ மழை வரும் வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் வெய்யில் சற்று தணிந்து ஆங்காங்கே மழைப் பெய்துவருகிறது. காற்றும் பலமாக வீடத்தொங்கிவிட்டது. இந்நிலையில் தீடீரென்று கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் சேர்க்கப்படும்

NEXT STORY
வேதரண்யத்தில் கடல் சீற்றம், 5000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை Description: வேதரண்யத்தில் கடல் மிகுந்த கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
Loading...
Loading...
Loading...