மாணவர்கள் கையில் சாதியை குறிக்கும் வண்ண கயிறுகள்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகம்
Updated Aug 13, 2019 | 19:55 IST | Times Now

பள்ளிகளில் மாணவர்கள் சாதிப்படி கைகளில் வண்ணக்கயிறுகள் கட்டியுள்ளதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

School Education Department
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு  |  Photo Credit: Twitter

சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகள் கட்டியுள்ளதை கண்டறிந்து, அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க தமிழநாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது கண்டறிதத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளை குறிக்கும் வகையில் கையில் வண்ண சாதிக்கயிறுகள், ரப்பர்பேண்ட்கள் அணிந்துள்ளனர். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறுகளை கட்டியுள்ளனர்.  

மேலும் எந்தெந்த மாணவர்கள் யாருடன் பழக வேண்டும் என்றும், யாருடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு குறிக்க இவ்வாறு செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் பிரிவினை எண்ணத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. விளையாட்டு தேர்வுகள், உணவு இடைவேளை, போட்டிகள் ஆகியவற்றில் சாதி பாகுபாடுகள் செய்ய இது உதவுகிறது. இதனை பள்ளி நிர்வாகமும், அந்த பகுதி சாதி தலைவர்களும் ஆதரிக்கிறார்களாம். சில மாணவர்களே இதை விருப்பத்துடன் செய்கிறார்கள் என்றும் அவர்கள் சாதி பாகுபாடுகளுடன் செயல்படுவதாகும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.  .            

இந்நிலையில் தமிழநாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதனை உடனே கண்டறிந்து இது போன்ற செயலகளில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியகை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.        

NEXT STORY