சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம்
Updated Oct 15, 2019 | 18:20 IST | சு.கார்த்திகேயன்

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர வேறுகட்சிக்கு போகமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

Minister Rajendra Balaji
அமைச்சா் ராஜேந்திர பாலாஜி  |  Photo Credit: Twitter

நெல்லை: சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் அவரை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து முதல்வரும் துணை முதல்வரும்தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  நாம் தமிழர் வேட்பாளராக ராஜ்நாராயணன் உள்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது சசிகலா குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, " சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து முதல்வர், துணை முதல்வரின் முடிவு செய்வார்கள். அவர் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோரின் எண்ணம். அவர் திமுகவால் பழிவாங்கப்பட்டிருக்கிறார். 'அம்மா, சின்னம்மா' மீது திமுகதான் பொய்வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா இன்றைக்கு இல்லை. ஆதலால், அவர்கள் நாடகமாடலாம். என்னதான் அவர்கள் வழக்கு போட்டாலும். இருவரும் தெய்வத்தின் முன்னால் நிரபராதிகள்.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர வேறுகட்சிக்கு போகமாட்டார். அவர் வெளியே வந்தபின்பும் அதிமுகவே ஆட்சிய செய்ய வேண்டும் என எண்ணுவார்" என்று தெரிவித்தாா். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...