சென்னை முழுவதும் சிசிடிவி இருந்தும்...ஒரே நாளில் 8 வழிப்பறி சம்பவங்கள்!

தமிழகம்
Updated Jun 24, 2019 | 18:23 IST | Times Now

கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிபோயுள்ளன. 

chennai city, சென்னை
வழிப்பறிக்கொள்ளை  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை முழுவதும் ஒரே நாளில் கிட்டதட்ட எட்டு இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை மாநகர் முழுவதுமே சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை சாலை ஒன்றில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்கள் அவரது கழுத்துச் சங்கிலியைப் பறித்துச் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சிசிடிவியில் பதிவாகியுள்ள இக்காட்சியில் கொள்ளையடித்தவர்கள் பிடியில் இருந்து சாந்தா தூக்கி வீசப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளது. 

இந்த வழிப்பறி சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

அதேநாளில் கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிபோயுள்ளன. 

சிசிடிவி கேமரா மூலமாக குற்றவாளிகள் அடையாளம் தெரிய வரும் என்று தெரிந்தும் தைரியமாக இந்த செயலில் ஈடுபடும் வழிப்பறி கொள்ளையர்களால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். 

NEXT STORY
சென்னை முழுவதும் சிசிடிவி இருந்தும்...ஒரே நாளில் 8 வழிப்பறி சம்பவங்கள்! Description: கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிபோயுள்ளன. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles